2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யாழுக்கு பிரதமர் விஜயம்

Niroshini   / 2021 ஜூலை 18 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்காக வேலணை, சாவகச்சேரி, கொடிகாமம், நாவற்குழி, நெல்லியடி, மருதனார்மடம் ஆகிய 6 பிரதேசங்கள் இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டுள்ளன.

இதில் முதற்கட்டமாக வேலணை, கொடிகாமம், நாவற்குழி, மருதனார்மடம் ஆகிய 4 பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இதற்கான திட்ட வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த செயற்றிட்டம் எதிர்வரும் 31ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் யாழ்ப்பாணத்தில் வைத்து ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

100 நகரங்களை நகரங்களை பல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்துக்கு சுமார் 2000 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு பிரதேசத்தை பல்பரிமாண நகராக்குவதற்கு முதற்கட்டமாக 20 மில்லியன் ரூபாய் செலவிடப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .