2025 மே 01, வியாழக்கிழமை

யாழுக்கு வந்தடைந்த ஹரிஹரன் குழு

Mithuna   / 2024 பெப்ரவரி 07 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள ஹரிஹரன் இசை நிகழ்வுக்காக இந்திய பாடகர் ஹரிஹரன்  உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை  (07)  யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை  வந்தடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் வெள்ளிக்கிழமை  (09)  நடைபெறவுள்ள இந்த  இசை நிகழ்ச்சியில்  தென்னிந்திய திரைப்பட பிரபலங்களான நடிகை தமன்னா,  ஐஸ்வர்யா ராஜேஷ்,  யோகி பாபு,  சாண்டி மாஸ்டர்,  புகழ்,  பாலா உள்ளிட்ட பல கலைஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும்  இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நடிகை ரம்பா மற்றும் நடன இயக்குநர் கலா மாஸ்டர் ஆகியோரும்  யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .