2025 மே 13, செவ்வாய்க்கிழமை

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தின் இரு அதிகாரிகளுக்கு தனிமைப்படுத்தல்

Editorial   / 2020 ஜூன் 10 , பி.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தச்  சேர்ந்த இரு அதிகாரிகள், கொரோனா அச்சம் காரணமாகத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - இணுவிலில் பகுதியில் தங்கியிருந்த  இந்தியப் பிரஜை ஒருவர், இந்தியா திரும்பிய நிலையில், அவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

குறித்த நபரை, யாழ்ப்பாணத்திலிருந்த கொழும்புக்கு, பஸ்ஸில் அழைத்துச் சென்ற இந்தியத் தூதரக அதிகாரி ஒருவரும் குறித்த இந்தியப் பிரஜையுடன் தங்கியிருந்தபோது உயிரி​ழந்த மற்றுமோர் இந்தியப் பிரஜையின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் வழங்கும் பணியை மேற்கொண்டவருமே, இவ்வாறு  தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X