Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இந்தியாவுக்கான விமானச் சேவை பெப்ரவரி 27ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாகத் தெரிவித்த யாழ்ப்பாண வர்த்தக சங்க உப தலைவர் ஆர்.ஜெயசேகரன், அன்றைய தினத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் நாளாந்த விமான சேவைகள் இடம்பெறுமெனவும் கூறினார்.
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில், நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், இதற்கான ஏற்பாடுகளை, குறித்த விமான சேவை நிறுவனம் மேற்கொண்டுள்ளதாகவும் இதற்கமைய கால நேர அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, காங்கேசன்துறை துறைமுகம் புனரமைக்கப்பட்டு, அதனுடான கப்பல் சேவைகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென்றும், அவர் கோரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
45 minute ago