Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மே 20 , பி.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
தற்போது நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக, யாழ் குடாநாட்டில் டெங்கு நுளம்பு பெருகக் கூடிய சாத்தியக் கூறுகள் கூடுதலாக காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் எஸ். மோகன குமார் தெரிவித்துள்ளார்
யாழ்ப்பாணத்தில், இன்று (20) நடைபெற்ற ஊடகவிலயலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய சூழ்நிலையில், பொதுமக்கள் டெங்கு காய்ச்சல் தொடர்பாகவும் விழிப்பாக இருக்க வேண்டுமெனவும் நாம் ஒவ்வொருவரும் கொரோனா வைரஸ், டெங்கு காய்ச்சல் ஆகியன தொடர்பாக அக்கறையுடன் சிந்தித்து செயற்பட்டால் மட்டுமே, இந்த இரண்டு தொற்று நோய்களிலிருந்து வெற்றிகரமாக எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமெனவும் கூறினார்.
அத்துடன், யாழ் குடாநாட்டில், டெங்கு நுளம்பு ஒழிப்பு தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனைகளின் போது, வீடுகளில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏற்ற இடங்கள் இனங்காணப்படுமேயானால், வீட்டு உரிமையாளருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் மோகன குமார் எச்சரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
29 minute ago
40 minute ago
46 minute ago