Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
எம். றொசாந்த் / 2019 ஜனவரி 25 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கின் நுழைவாயில் எனும் தொனிப்பொருளில் வருடாந்தம் நடைபெற்று வரும் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக் கண்காட்சி இம்முறை 10 ஆவது தடவையாக யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது.
யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (25) முதல் நாளை மறுதினம் (27)ஆம் திகதி வரை மூன்று நாட்கள் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சி கூடங்களை இன்று (25) யாழ்.மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் திறந்து வைத்தார்.
10 ஆவது வருடமாக நடைபெறும் இக் கண்காட்சியில் உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் பங்குபற்றி தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தவுள்ளனர். அத்துடன் தொழில் வழிகாட்டல்கள், கல்வி ஆலோசனைகள், மருத்துவ பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் பிரதான அம்சங்களாக இடம்பெற்று உள்ளன.
அதேவேளை கண்காட்சியை பார்வையிடுவதற்கு பாடசாலை சீருடையுடன் வரும் மாணவர்களுக்கு கட்டணங்கள் அறவிடப்பட மாட்டாது எனவும், ஏனையவர்களுக்கு 50 ரூபாய் நுழைவு கட்டணமாக அறவிடப்படும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 May 2025
18 May 2025
18 May 2025