Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
செல்வநாயகம் கபிலன் / 2017 ஓகஸ்ட் 09 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற பாரதூரமான குற்றச்செயல்கள், வாள்வெட்டுடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் நால்வரை நேற்று (08) இரவு கைதுசெய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைதான நால்வரும் மானிப்பாய் நவாலி பகுதியைச் சேர்ந்த 22, 23, 24 வயதுடைய நபர்கள் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
2016ஆம் ஆண்டு வீதி ரோந்துக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாரை வாளால் வெட்டிக் காயம் ஏற்படுத்தியமை, கொக்குவில் பகுதியில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்களில், குறித்த நபர்கள் தேடப்பட்டு வந்தநிலையிலேயே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .