2025 மே 17, சனிக்கிழமை

யாழ். தீவகக் குடிநீர்ப் பிரச்சினைக்கு 30இல் தீர்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 20 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்ப் பிரச்சினைத் தீர்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணிகள் எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்தப் பணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இதனை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

2018ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டு, இவ்வாண்டு ஓகஸ்ட் மாதம் நிறைவடைய வேண்டிய இந்தத் திட்டம், வனவள ஜுவராசிகள் திணைக்களத்தின் முட்டுக்கட்டையால் ஓராண்டு தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் நிலவும் குடிநீர்ப் பிரச்சினை குறித்து, நீண்ட காலமாக பலதரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றதுடன், அதற்குப் பல்வேறு தீர்வுகளும் முன்வைக்கப்பட்டன.

இரணைமடுவிலிருந்து குடிநீரைக் கொண்டுவருதல், வடமராட்சி கிழக்கிலிருந்து கடல் நீரை நன்னீராக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் முன்மொழியப்பட்டபோதும், அதிலுள்ள அரசியல் இழுபறிகள் காரணமாக, எந்தவொரு திட்டமும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் ‘மாற்றுக் குடிநீர்த் திட்டம்’ என்ற பெயரில், வடமராட்சி நீரேரியில் உள்ள நீரை குளத்தில் தேக்கி விநியோகிக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்தத் திட்டம் 2 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .