2025 செப்டெம்பர் 04, வியாழக்கிழமை

யாழ்.பல்கலை நுழைவாயிலில் கட்டப்பட்டது கறுப்புத் துணி

Freelancer   / 2022 பெப்ரவரி 04 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

என்.ராஜ்

யாழ். பல்கலைக்கழக  பிரதான நுழைவாயிலில் கறுப்பு நிற துணி கட்டப்பட்டு இன்றைய சுதந்திர தினத்தை கரி நாளாக மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்று முள்ளிவாய்க்காலில் இடம்பெறும் சிவில் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக, பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்காக, தமது வாகனங்களை பல்கலைக்கழகத்தில்  தரித்துவிட்டு செல்ல முற்பட்ட நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் மாணவர்கள் உள்நுழைய அனுமதி மறுக்கப்பட்டதோடு, பரமேஸ்வரா ஆலயத்திற்கு செல்பவர்களிற்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய நாள் சுதந்திர தினம் என  கொடியேற்றுகிறீர்கள் ஆனால்  பல்கலைக்கழகத்திற்குள் மாணவர்கள், ஆலய வழிபாட்டை மேற்கொள்பவர்கள் செல்ல முடியாதா? என மாணவர்களால் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில்,

பல்கலைக்கழகத்தில் கடமையாற்றுபவர்களையே நாங்கள் அனுமதிக்கவில்லை என பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மாணவர்களால் சுதந்திர தினம் கரி நாள் என தெரிவித்து  கறுப்பு  துணி பிரதான வாயிலில் கட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .