2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ் பல்கலை மாணவர்கள் திங்களன்று விடுவிக்கப்படுவர்?

Editorial   / 2019 மே 10 , பி.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியால், ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக, திங்கட்கிழமை(13) சட்டமா அதிபரின் அறிக்கை, யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டுள்ள யாழ்ப்பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை உறுதியாகி உள்ளதாகவும் தெரியவருகிறது.

கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டி சாலை நடத்துநர் ஆகியோரை விடுவிப்பதற்கு,  நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில், அங்கஜன் எம்.பியின் ஏற்பாட்டில், ஜனாதிபதி செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட ஆகியோருடன்,  ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பொன்று, இன்று (10) காலை இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில், யாழ் மருத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி ரவிராஜ், சிரேஷ்ட மாணவ ஆலோசகர் கலாநிதி ஐங்கரன், மாணவ ஆலோசகர் கலாநிதி றாயுமேஸ், யாழ் பல்கலைகழக பீடங்களின் மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பின் பின்னர், ஜனாதிபதியால் ஜனாதிபதி செயலாளரின் ஊடாக சட்டமா அதிபருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக, திங்கட்கிழமை சட்டமா அதிபரின் அறிக்கை, யாழ் மாவட்ட நீதிபதிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் மாணவர்களின் விடுதலை உறுதியாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X