2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

யாழ்.பல்கலை மாணவர்கள் போராட்டம்

Gavitha   / 2021 ஜனவரி 04 , பி.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். றொசாந்த், என்.ராஜ்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வகுப்புத் தடை விதிக்கப்பட்ட மாணவர்கள், இன்று (04) உணவுத் தவிர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டம், யாழ்.பல்கலைக்கழக பரமேஸ்வரர் ஆலய நுழைவாயிலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், தங்களுக்கு விதிக்கப்பட்ட வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே, இந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு வருகை தந்த கோப்பாய் பொலிஸார், போராட்டத்தைக் கைவிடுமாறும், இந்த விடயத்தை உயர் அதிகரிகளின் கவனத்துக்குக் கொண்டு வருவதாகவும் மாணவர்களிடம் தெரிவித்தனர்.

எனினும், பொலிஸாரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத மாணவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X