2025 மே 10, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் போராட்டம்

Editorial   / 2020 ஓகஸ்ட் 26 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எஸ்.நிதர்ஷன்,  எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு உத்தியோகத்தர் கூட்டுறவு தொழிற்சங்கத்துக்கெதிராக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால், பல்கலைக்கழக வளாகத்தில், நேற்று (26) காலை கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கொரோனா காலத்தில் இடம்பெற்ற களவுகள்  தொடர்பில் தம் மீது பழி சுமத்தப்பட்டமைக்கும் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தொழிற்சங்கம் கோரிக்கை விடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவோரை தவிர ஏனைய அனைவரும் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X