2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பிணையில் விடுதலை

எம். றொசாந்த்   / 2018 ஜனவரி 25 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவபீட 3ஆம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் 13 பேரும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரனால் இன்று (25) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 18ஆம் திகதி இரவு, யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட 4ஆம் வருட மாணவர்களுக்கும் 3 ஆம் வருட மாணவர்களுக்கும் இடையில் கைகலப்பு இடம்பெற்றது.

இந்நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் 3 ஆம் வருட மாணவர்கள் 4 பேரை கைது செய்து யாழ்.நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, 4 பேரையும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த திங்கட்கிழமை (22) நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த கைகலப்புடன் தொடர்புடைய 3ஆம் வருட  மாணவர்கள் 9 பேர் நேற்று (24) கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர்.

குறித்த மாணவர்களை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர்களை இன்று (25) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், 13 மாணவர்களும் இன்று (25) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 13 மாணவர்களையும் நிபந்தனையுடனான பிணையில் விடுவித்து நீதவான் உத்தரவிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .