2025 செப்டெம்பர் 27, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழக வளாகம் 21 இல் மீள திறக்கப்படும்

க. அகரன்   / 2018 ஏப்ரல் 30 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், எதிர்வரும் 21ஆம் திகதி திறக்கப்படவுள்ளதென, வளாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், வளாகத்தில் அத்துமீறி பௌத்த சின்னமொன்றை பிரதிஸ்டை செய்வதற்கு, சிங்கள மாணவர்கள் முயன்றதால், வளாகத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதையடுத்து, காலவரையறையின்றி வளாகத்தை மூடுமாறு, வளாகத்தின் முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.

மேலும், குழப்பத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காகக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .