Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2022 டிசெம்பர் 29 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே. நடராஜ்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது.
யாழ். பல்கலைக்கழக பரமேஸ்வரா ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான திருவெம்பாவை பாராயணம், இராமநாதன் வீதியூடாக கலட்டி சந்தியை அடைந்து, பாலசிங்கம் விடுதி ஊடாக தபால் பெட்டி சந்தி, பரமேஸ்வரா சந்தியை அடைந்து மீண்டும் பரமேஸ்வரா முன்றலில் பாராயணம் முடிவுற்றது.
இதன்பொழுது, குறித்த பகுதிகளில் உள்ள கோவில்களையும் தரிசித்த வண்ணம் பாராயணம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஜனவரி ஐந்தாம் திகதி திருவெம்பாவையை முன்னிட்டு, கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் மார்கழி பெருவிழா முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
11 minute ago
3 hours ago
3 hours ago