Niroshini / 2021 ஜூன் 23 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்தில், 2019/2020ஆம் கல்வியாண்டில், 'சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும்' எனும் கற்கைநெறி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து, யாழ். பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட வியாபார நிருவாகமாணி, வணிகமாணி பிவரிவுகளுக்கு உள்வாங்கப்படும் புதுமுக மாணவர்களுடன் சுற்றுலாத்துறையும் விருந்தோம்பலும் கற்கை நெறிக்கான மாணவர்களும் உள்வாங்கப்படவுள்ளனர்.
இவர்களுக்கான அறிமுக நிகழ்வு, ஜுன் 28ஆம் திகதி,இணைய வழி வாயிலாக நிகழ்நிலையில் இடம்பெறவுள்ளது.
2019/2020ஆம் கல்வியாண்டுக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்கள் www.maco.jfn.ac.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக மேலதிக விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாமென்று, வணிக முகாமைத்துவ பீடாதிபதி பேராசிரியர் பா. நிமலதாசன் அறிவித்துள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago