2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்துக்கு முன்பாக போராட்டம்

Editorial   / 2017 ஒக்டோபர் 04 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.றொசாந்த், எஸ்.நிதர்ஷன் 

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக, இன்று (04) மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைகழகத்துக்கு முன்பாக காலை 10 மணி தொடக்கம் 11 மணி வரையில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இலங்கைச் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் பலர் நீண்ட காலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடுதலையைக் கோரியும் வவுனியா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்குகளை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அநுராதபுரம் சிறைச்சாலையில் கடந்த 10 நாட்களாக உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தி வரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய வழக்குகள் வேறு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டால் அவர்கள் மொழிப் பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும் என்ற நியாயமான கோரிக்கையை கருத்தில் எடுக்கக் கோரியும் இக்கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், பல்கலைக்கழக கல்வி சார் மற்றும் சாரா ஊழியர் சங்கம், பொது அமைப்புக்கள் ஆகியோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .