2025 மே 17, சனிக்கிழமை

யாழ்.பல்கலையில் சோதனை; இருவர் கைது

Editorial   / 2019 மே 03 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், இன்று (3) காலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் புகைப்படங்கள் மற்றும் மாவீரர்களின் புகைப்படங்கள் என்பவற்றைக் கைப்பற்றியுள்ள இராணுவத்தினர், இருவரை கைதுசெய்து, கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் ஆகியோரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பல்லைக்கழகத்தின் கலைப்பீட மாணவர் ஒன்றிய அலுவலகத்தை சோதனையிடப்பட்ட போது, அதனுள் விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் மாவீரர்களின் உருவ படங்கள் என்பன மீட்கப்பட்டன. 

இதேவேளை மாணவர் விடுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது , விடுதியில் இருந்து இராணுவத்தினர் அணியும் பாதணி போன்ற தோற்றமுடைய ஒரு சோடி சப்பாத்து , மற்றும் தொலைநோக்கி என்பவற்றையும் இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இதன்போது கைதுசெய்யப்பட்ட இருவரையும் கோப்பாய் பொலிஸார் தடுத்துவைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .