Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு, மேலும் ஒரு வாரம் சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் தெரிவித்தார்.
இதற்கமைய, இரண்டாம் தவணை ஆரம்பிக்கும் போதே யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணம் மாநகரில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச் 29ஆம் திகதி தொடக்கம் கடந்த வாரம் வரை, யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய, இந்தச் சிறப்பு விடுமுறை, நாளை (06) தொடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்கப்படுகிறது.
இதன்மூலம் யாழ்ப்பாணம் கல்வி வலயப் பாடசாலைகள் வரும் ஏப்ரல் 19ஆம் திகதி, இரண்டாம் தவணை ஆரம்பித்திலேயே திறக்கப்படும் என்றும் எல்.இளங்கோவன் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .