2025 மே 17, சனிக்கிழமை

யாழ். புத்தகத் திருவிழா ஆரம்பம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 27 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் எண்ணக்கருவுக்கமைய, இலங்கை புத்தக விற்பனையாளர்கள், இறக்குமதியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில், யாழ். புத்தகத் திருவிழா – 2019, இன்று (27) ஆரம்பமானது,

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை, யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தார்.

இந்தப் புத்தகக் கண்காட்சியானது, செப்டெம்பர் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

30 தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள குறித்த புத்தக கண்காட்சியானது, பாடசாலை மாணவர்களுக்கான புத்தகங்கள், சிறுவர் கதைகள், வழிகாட்டி நூல்கள், ஈழத்துப்படைப்புக்கள் உள்ளிட்ட உள்ளூர், இந்திய மூத்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .