2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ். பெண்களுக்கு பயிற்சி நெறி

Editorial   / 2019 மார்ச் 21 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம். றொசாந்த்

சமூகத்தில், வறுமைக்கோட்டுக்குட்பட்ட பெண்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில், தென்னை சார் கைப்பணிப் பொருள்களின் பயிற்சி நெறியொன்று நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சி நெறி, நல்லூர், சட்டநாதர் சிவன் கோவிலடியில் உள்ள "திவ்விய ஜீவன" மண்டபத்தில், நாளை (22) காலை 9. 30 மணியளவில், தெங்கு அபிவிருத்தி சபையின் பிராந்திய முகாமையாளர் வைகுந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, விளக்குமாறு, துடைப்பம், சிரட்டை அலங்காரம், தென்னோலையிலான கைவேலைகள் ஆகியவற்றுக்கான பயிற்சி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .