Freelancer / 2022 ஏப்ரல் 08 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பகுதியில், இன்றைய தினம் காலை ஒன்று கூடிய வைத்தியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைந்துள்ளது, இலவச சுகாதாரம் இல்லாது ஒழிக்கப்படுகின்றது, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது, மருத்துவம் மக்களின் அடிப்படை உரிமை, மக்களின் உயிருடன் விளையாட வேண்டாம், சுகாதார வசதிகளை இல்லாதொழிக்க வேண்டாம் போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைத்தியர்களால் தாங்கி பிடிக்கப்பட்டது.
அரசின் மோசமான நிதி, நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என்றும், மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ளதாகவும் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் போராட்டத்தில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)
36 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
4 hours ago