2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

‘யாழ். மக்களின் பிரச்சினைகளை பிரதமரிடம் எடுத்துரைப்பேன்’

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ். மக்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகள் தேவைகள் மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார் தெரிவித்தார்.

யாழுக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் வண பிதா எஸ்.சந்திரகுமார், அமைச்சர் வாசுதேவவின் யாழிலுள்ள கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அக்கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்ற டேவிட் நவரட்னராஜா மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பொன்றையும் நடத்தியிருந்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X