Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 02:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
உண்ணி காய்ச்சல், டெங்கு, மலேரியா காங்ச்சல் ஆகியன தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் அவதானமாக செயற்படுமாறு, யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் சி. யமுனானந்தா அறிவுறுத்தியுள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில், இன்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், உண்ணி காய்ச்சல் என்பது மழைக்குப் பின்னரான காலத்தில் வயல்களில், தோட்டங்களில் வேலை செய்யும் போது தொற்றுகின்ற நோயாக காணப்படுவதாகவும் இதனை ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்தால் பாதுகாக்கலாம் எனவும் கூறினார்.
தவறும் பட்சத்தில் உயிரிழப்பு ஏற்படலாமெனத் தெரிவித்த அவர், எனவே நாய், பூனைகளுடன் தொடர்பில் இருப்பவர்கள் கவனமாக இருத்தல் வேண்டும் எனவும் காய்ச்சல் வரும்போது, உரிய மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
அதே போல டெங்கு காய்ச்சலும் இந்த மழையுடன் அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவித்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில், சுமார் 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றார்கள் எனவும் கூறினார்.
அத்துடன், சில நாள்களுக்கு முன்னர், வெளிநாட்டில் இருந்து வந்த ஒருவருக்கு, மலேரியா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனவும், அவர் கூறினார்.
'மலேரியா பரப்புகின்ற நுளம்பு எமது பிரதேசத்தில் காணப்படுகின்றமையாலும் தற்போது நோயாளி ஒருவர் இனங்காணப்பட்டு உள்ளமையாலும் நாங்கள் நுளம்பை கட்டுப்படுத்தவற்குரிய கவனம் எடுத்தல் வேண்டும்.
'அத்தோடு, நுளம்பு குடம்பிகளில் மலேரியா நோய் தன்மை உள்ளதா என்பதை சுகாதாரப் பிரிவினர் ஆராய்ந்து வருகிறார்கள்' எனவும், அவர் தெரிவித்தார்.
மலேரியா நோய் உள்ள நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயமாக தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்த அவர், அத்தோடு அவர்களுக்கு காய்ச்சல் ஏற்படும் போது அவர்களுக்கு கட்டாயமாக மலேரியா பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் இவை அனைத்தும் யாழ். போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்றது எனவும் கூறினார்.
'குறிப்பாக யாழ். போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலில் மலேரியா நோய்க் கிருமி தொற்றக்கூடிய ஏதுநிலை காணப்படலாம். ஒரு நோயாளி உள்ளதன் காரணமாக, மாநகர சபையினர் யாழ். போதனா வைத்தியசாலை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அத்தோடு, நுளம்பு பெருகும் குப்பை கூழங்களை உடனடியாக அகற்ற வேண்டும்' என்றார்
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago