2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ். மாணவர்கள் நாளை வகுப்புப் பகிஷ்கரிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 14 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறி ஒரு வருடம் கடந்தும், இன்னும் பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லையெனத் தெரிவித்துள்ள யாழ்ப்பாணப் பல்கழைக்கழக மாணவர் ஒன்றியம், இந்தப் பட்டமளிப்பு விழாவை நடத்துமாறும் மாணவர்களின் பெறுபெறுகளை வெளியிடுமாறும் வலியுறுத்தி, நாளை (15) வகுப்புப் பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாணவர் ஒன்றியத்தினால் இன்று (14), ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ள ஒன்றியம், கடந்த மூன்று மாதக் காலப்பகுதியில், சில பரீட்சைகளின் பெறுபேறுகளை வழங்கவில்லையெனவும் இதனால், மாணவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்நோக்கி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து கல்வி கற்று வெளியேறி ஒரு வருடம் கடந்தும், பல பீடங்களுக்கு இதுவரை பட்டமளிப்பு விழா நடத்தப்படவில்லையெனக் குறிப்பிட்டுள்ள ஒன்றியம், இதற்கு, வேந்தர் நியமிக்கப்படாமையும் ஒரு காரணமாக உள்ளதெனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பாக, ஓகஸ்ட் 7ஆம் திகதியன்று, தாம் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடப் போகின்றோமெனக் குறிப்பிட்டு கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தும், இதுவரை இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத காரணத்தால், நாளை (15) முதல் வகுப்புப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக, அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X