2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு மிரட்டல்

எம். றொசாந்த்   / 2019 மார்ச் 21 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மாநகர சபை முதல்வருக்கு தொலைபேசி ஊடாகவும், கடிதம் ஊடாகவும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழில். நடைபெற்ற கம்பன் விழாவுக்கு செல்ல கூடாது எனவும், மீறிச் சென்றால் கொலை செய்யப்படுவீர் என எச்சரித்து, அரசியல்வாதி ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் மோத வேண்டாம் எனவும் எச்சரித்து 15 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்று முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை முதல்வரின் மனைவியின் தொலைபேசி இலக்கத்திற்கு புதைகுழி ஒன்றின் புகைப்படம் அனுப்பி வைக்கப்பட்டு அதற்கு தயார் செய்யுமாறு தகவல் அனுப்பட்டு உள்ளது.

குறித்த கடிதம் தொடர்பிலும் தொலைபேசி ஊடான அச்சுறுத்தல் தொடர்பிலும், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு முதல்வர் கொண்டு சென்றார். அவரின் ஆலோசனையின் பிரகாரம் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதேவேளை, யாழ்.மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் அனுமதியின்றி கேபிள் கம்பங்களை கேபிள் தொலைக்காட்சி இணைப்புக்களை வழங்கும் நிறுவனம் நாட்டி இருந்தன. அவற்றை மாநகர சபை ஊழியர்கள் மூலம் நாம் அகற்றி இருந்தோம். அது தொடர்பில் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அந்த கம்பங்களை அகற்றியமையால் அந்த நிறுவனத்தார் மாத்திரமே தனக்கு எதிரிகளாக உள்ளனர் என விசாரணைகளின் போது முதல்வர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த கேபிள் இணைப்புக்களை வழங்கும் நிறுவனத்தின் குடும்ப உறுப்பினரொருவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .