2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த ஜப்பான் தூதுவர்

Freelancer   / 2022 ஜூன் 29 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத், டி.விஜித்தா

யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் ஜப்பானிய தூதுவருக்கிடையிலான சந்திப்பு ஒன்று யாழ்.மாநகர சபையில் இன்றைய தினம் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டது, ஜப்பான் கடந்த காலங்களில் யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் செய்துவந்த பொருளாதார மற்றும் அபிவிருத்தி பணிகளுக்கு யாழ். மாநகர முதல்வர் என்ற வகையிலும் மாநகர மக்கள் சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது. 

தற்சமயமும் இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ஒன்றுக்கு ஜப்பானிய அரசு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றும், இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி முன்நிபந்தனையாக இலங்கையில் ஒரு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசுக்கு ஜப்பானிய அரசு விடுக்க வேண்டும் என்றும் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஜப்பானிய தூதுவரிடம் கேட்டுக்கொண்டார். (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .