Freelancer / 2022 ஜூன் 07 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கமநல சேவைகள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட எரிபொருள் அட்டைகளுக்கு இன்றும் நாளையும் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசனின் அறிவுறுத்தலின் பிரகாரம், கமநல சேவைகள் திணைக்களம் மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து இந்த நவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது.
பயிர்ச்செய்கை நிலங்களின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்கு அண்மையில் எரிபொருள் அட்டை வழங்கப்பட்டது.
அந்த அட்டையைக் காண்பித்து யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் இன்றும் நாளையும் மண்ணெண்ணெயைப் பெற்றுக்கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிபிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். (a)
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026