2025 மே 15, வியாழக்கிழமை

யாழ். மாவட்டத்தில் 7,342 பேர் டெங்கால் பாதிப்பு

Editorial   / 2020 ஜனவரி 01 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில், கடந்தாண்டில் 7,342 பேர் டெங்கு நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என்றுத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டப் பிராந்தியச் சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஈ.தேசநேசன், டெங்கு தாக்கத்தால், மூவர் உயிரிழந்துள்ளனர் எனவும் கூறினார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், இவ்வாண்டு டெங்குக் காய்ச்சல் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் வரிசையில், யாழ்ப்பாணம் மாவட்டம் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளதாகவும் யாழில் தொடராகப் பெய்த பருவமழை காரணமாகவே, டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்ததாகவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .