Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மார்ச் 16 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், தற்போது வெங்காயச் செய்கையில், வெங்காயத்தாள் கொதிபுழுவின் தாக்கம் இனம் காணப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட விவசாய பிரதிப் பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன், நேற்று (15) தெரிவித்தார்.
இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், தற்போது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் புதிதாக நீண்ட காலத்துக்குப் பின்னர் வெங்காயத்தாள் கொதி புழுவின் தாக்கம் இனங்காணப்பட்டுள்ளதாகவும் 1980, 1981ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இதன் தாக்கமானது ஜார் மாவட்டத்தில் முதல்முறையாக இனங்காணப்பட்டதாகவும் கூறினார்.
தற்பொழுது இந்தப் புழுவின் தாக்கம் மீண்டும் இனங்காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் தாக்கமானது, ஆரம்ப காலத்தில் வெங்காயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு, 20ஆவது நாளில் அவதானிக்கக்கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.
ஆனால் தற்பொழுது நடைபெறுகின்ற இந்த வெங்காய செய்கையில், 40 - 45 நாள்களுக்குப் பின்னர், வெங்காயத்தில் தாள் கொதி புழுவின் தாக்கத்தை இனங்காணக் கூடியதாக உள்ளதாகத் தெரிவித்த அவர், விவசாயிகள் இரு தரப்பில் தங்களுக்கு அறிய தந்ததை அடுத்து, தாங்கள் நேற்றைய தினம் கள விஜயத்தை மேற்கொண்டோமெனவும் கூறினார்.
“அதற்குரிய தீர்வை வழங்குவதற்கு தம்மாலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதெனத் தெரிவித்த அவர், .வெங்காயத்தின் குமுழீலில் இதன் தாக்கம் இனங்காணப்படுவதனால், விதை வெங்காயத்திலும் இதன் பாதிப்பு காணக்கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.
விவசாயிகள் இது தொடர்பில் பூரண அறிவைப் பெற்று, விவசாய போதனாசிரியர்களுடன் தொடர்பு கொண்,டு இதனை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பிலான விளக்கங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.
யாழ். மாவட்டத்தின் பிற பகுதிகளில், 50 ஏக்கர் அளவுக்கு இந்தப் புழுவின் தாக்கம் காணப்படுகின்றதெனவும் புழுக்கள் ஆவதற்கு முன்னர் இந்த அந்துப் பூச்சிகள் வெங்காயத்தின் தாளில் முதல் தாக்கத்தை ஏற்படுத்துமெனவும், அவர் கூறினார்.
அங்கு, அவை முட்டைகளை கொத்துக்கொத்தாக இடுவதனை காணக்கூடியதாக இருக்குமெனத் தெரிவித்த அவர், அந்த முட்டையில் இருந்து உருவாக்கப்படும் குடம்பிகள், ஆரம்பத்தில் வெங்காயத்தின் இலையின் மேற்பகுதியில், பச்சயத்தினை உணவாகக் கொள்வதனை காணக்கூடியதாக இருக்குமெனவும் கூறினார்.
விவசாயிகள், காலை மற்றும் மாலை நேரங்களில், வெங்காயத்தின் அடிப்பகுதியில் அவதானிக்கும் பொழுது இதன் தாக்கத்தை உணரக்கூடியதாக இருக்குமெனவும், அவர் கூறினார்.
17 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago