Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
-என்.ராஜ்
இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக, விரைவில் நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்படும் என, யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் உறவுகளால், உயிரிழந்தோரின் நினைவாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் தூபியொன்றை அமைப்பதற்கு எமக்கு இடம் ஒதுக்கித்தருமாறு நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
அந்த விடயம் தொடர்பில், தமது வைத்தியசாலையின் பல்வேறுபட்ட குழுக்களின் ஒப்புதலைப் பெற்றப் பின்னர், புதிய வசதியொன்று செய்யப்பட்டு, பொருத்தமான இடமொன்று தெரிவு செய்யப்பட்டு, நினைவுத்தூபி அமைக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளன எனத் தெரிவித்த அவர், தற்போது வைத்தியசாலையை நோக்கி பல்வேறு நோய் உடையவர்களும் பிரச்சினை உடையவர்களும் சிகிச்சைக்காக வந்த வண்ணம் இருக்கின்றார்கள் எனவும் கூறினார்.
கொரோனா தாக்கம் குறைவடைந்துள்ள போதிலும், கொரோனா சிகிச்சைக்கான அதிதீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மூன்று விடுதிகள் இயங்கிய வண்ணமே உள்ளன எனத் தெரிவித்த அவர், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுக்கான சிகிச்சை வசதிகள் தற்போதும் தொடர்ந்த வண்ணம் உள்ளது எனவும் கூறினார்.
ஆகவே, கடுமையான வருத்தங்கள், ஏதாவது பிரச்சினைகள் இருப்பின், உடனடியாக வைத்தியசாலைகளை நாடவேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொண்ட சத்தியமூர்த்தி, அருகிலுள்ள வைத்தியசாலைகள் அல்லது போதனா வைத்தியசாலைக்கு வந்து, தங்களுடைய வருத்தங்கள் சம்பந்தமாக ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
'இதேவேளை, அனைவரும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள வேண்டும். தடுப்பூசியைப் பெறாதோர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு வர வேண்டுமாக இருந்தால். அவர்கள் வரமுடியும். தடுப்பூசி போடாதவர்கள் என்ற ரீதியில் அவர்களை நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. அவர்களுக்கும் ஏனையவர்களுக்கு போன்று சகல விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன' எனவும், சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
24 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
4 hours ago
6 hours ago
7 hours ago