2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘யாழ்ப்பாண மக்களின் உடல்களில் பிக்குமாரின் இரத்தம் ஓடும்’

Yuganthini   / 2017 ஜூன் 27 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த், ரொமேஸ் மதுசங்க

 

“யாழ்ப்பாண மக்களின் உடல்களில், இனி பௌத்த பிக்குமார்களின் இரத்தமே ஓடும்” என, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

இலங்கை தொழில் பயிற்சி அதிகார சபையினால் நடத்தப்பட்ட என்.வி.கியூ பயிற்சியை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, நேற்று (26), யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “யாழ்ப்பாணத்துக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர், யாழ். போதனா வைத்தியசாலைக்குச் சென்று, “எமது சகோதர மக்கள் சுகவீனம் அடைந்து அவர்களுக்கு குருதி தேவைப்படும் போது தமது குருதியை வழங்குங்கள்” என, இரத்த தானம் வழங்கிவிட்டுச் சென்றனர். இதன்மூலம், நல்லிணக்கம் என்பது வெறும் வார்த்தைகளால் அல்ல, செயற்பாடுகளாலேயே உருவாகும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது” என்றார்.

“வடமாகாண முதலமைச்சர், தனது இரண்டு பிள்ளைகளையும், சிங்கள சம்பந்திகளுக்கே திருமணம் செய்துகொடுத்துள்ளார். அவர்களும் தமது வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். இதேபோன்று, நாமும் இன, மத வேறுபாடுகள் இன்றி, அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்” எனத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X