2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தில் ஆடைத் தொழிற்சாலை

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராஜன் ஹரன்

 

யாழ்ப்பாணம் மாவட்டத்தின் தனியார் தொழிற்றுறைகளில் இளையோர்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுகொடுக்கும் நோக்கில், ஆடை உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிர்மாணிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்காக கள நிலை ஆய்வுகளை மேற்கொள்ள, கொழும்பில் இருந்து துறைசார்ந்த நிபுணர்கள் குழு அழைத்து வரப்பட்டுள்ளது. அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டுள்ளன.

இதற்கமைய, 05 ஏக்கர் காணியில், இத்தொழிற்சாலையை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், பொருத்தமான இடத்தை தெரிவு செய்கின்ற நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இத்தொழிற்சாலை மூலமாக, குறைந்தது 400 இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X