Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Editorial / 2018 மே 27 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் ஏற்பாட்டில், அரசாங்கத்தால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் விலை உயர்வு, வரிச் சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிராக, யாழ். பிரதான பஸ் நிலையத்துக்கு முன்பாக, செவ்வாய்க்கிழமை (29) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில், அக்கட்சியின் வட பிராந்திய செயலாளர் கா. கதிர்காமநாதன் (செல்வம்) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“மக்களுக்கு அத்தியவசியமான உணவுப் பொருட்களின் விலைகள் நாளாந்தம் உயர்த்தப்பட்டு வந்து இன்று உச்சமாகி நிற்கின்றன. அன்றாடப் பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருட்களின் விலை உயர்வால் போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் ஏகப் பெரும்பான்மையான தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் பெரும் வாழ்க்கைச் செலவுச் சுமையால் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.
“கடந்த அரசாங்கமும் இன்றைய ஆட்சியாளரும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றிடம் பெற்ற, பலகோடிக்கணக்கான கடன்களையும் அவற்றுக்கான வட்டிகளையும் மீளச் செலுத்துவதற்கு, மக்களிடமிருந்து வரிகள் மூலம் பணத்தை வாரியெடுத்துக் கொள்கின்றார்கள்.
“இன்றைய விலை உயர்வுகளும் கட்டண அதிகரிப்புகளும் கடன் சுமைகளும் ஊழல் மோசடிகளும் தவறான பொருளாதாரக் கொள்கைகளுமே இன்றைய மோசமான எதிர்விளைவுகளுக்கு காரணமாகும்.
“எனவே, உழைக்கும் மக்கள், தமது ஒடுக்கப்படும் வர்க்க நிலையைப் பொருளாதார, அரசியல், சமூக நிலைகளின் அடிப்படையில் கண்டுணர்ந்து, அனைவரும் ஓர் அணியில் அணிதிரள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago