2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

யாழ்ப்பாணத்தில் வாகனப் பிரசார பேரணி

Niroshini   / 2021 செப்டெம்பர் 14 , பி.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

விவசாய அமைச்சின் ஏற்பாட்டில், முதன் முறையாக, யாழ்ப்பாணத்தில், இன்று (14), சேதனமுறையில் நெற்செய்கையில் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கான வாகனப் பிரசார பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடமாண விவசாய திணைக்களம் இந்தப் பிரசார பேரணியை ஏற்பாட்டு செய்திருந்தது.

 குறிப்பாக யாழ். மாவட்டத்தில், நெல உற்பத்தி அதிகளவு செய்கை பண்ணப்படும் பிரதேசங்களான தென்மராட்சி, வலிகாமம் பகுதிகளில் இந்த பிரசாரப் பேரணி மேற்கொள்ளப்பட்டது.


 தற்போது அரசாங்கங்கத்தின் திட்டத்துக்கு அமைய, சேதன பசளையை தாங்களாகவே தயாரித்து பயிர்ச்செய்கையை மேற்காள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அத்துடன், நெற்செய்கை காலத்தில் ஏற்படும் கபிலநிறதத்தி, வென்முதுகு தத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும், விரைவு முறையில் உயிர் போசனை மிகு கூட்டெரு தயாரித்தல் எப்படி என்பது தொடர்பிலும் செயன்முறை மூலம் விளக்கப்படுத்தினர்.

இந்த ஆரம்ப நிகழ்வில், வடமாகாண விவசாய மாகாணப் பணிப்பாளர் எஸ்.சிவகுமார், யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஸ்ரீரங்கன் அஞ்சனாதேவி, நெற்செய்கை தொடர்பிலான போதனா ஆசிரியர் எஸ் நிரஞ்சன்,  மட்டுவில் பகுதிக்கான விவசாய போதனா ஆசிரியர் ஜனுஜா சேதுலிங்கம் மற்றும் விவசாயிகள் என பலர் கலந்துகொண்டனர்.

அத்துடன், சௌபாக்கிய திட்டத்தின் கீழ் நெல்லின் உற்பத்தி உற்பத்தி திறனை அதிகரிப்பதற்கு வரிசையில் நெல்லை விதையிடுவதற்கு நெல்மூடைகள் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .