2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் மரணம்

Freelancer   / 2022 ஜூன் 11 , பி.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆஸ்திரேலியா - மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.

இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மெல்பேர்ன்  dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த இந்த பெண் தனது கணவருக்கு நிரந்தர வதிவிட உரிமை கிடைத்த பின்னர், தனது மூன்று வயதுக் குழந்தையோடு மெல்பேர்னுக்கு  சென்றுள்ளார்.

அங்கு கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மெல்பேர்னில் தனது குடும்பத்துடன் இந்த பெண் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் உயிரிழந்த பெண் நான்கு பிள்ளைகளின் தாயார் எனவும் கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை விக்டோரியப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X