Princiya Dixci / 2022 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - குமுழமுனை பிரதேசத்தில் கடந்த 17ஆம் திகதியன்று யுவதி ஒருவர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
காரில் வந்த இளைஞர் கும்பலொன்று, யுவதியை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்தமையை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் முதற்கட்டமாக கடத்தலுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த மூன்று இளைஞர்களை கைதுசெய்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட யுவதி அவர் காதலித்த இளைஞனுடன் ஒன்றாக இருக்கின்ற ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து யுவதியும் இளைஞனும் திருகோணமலையில் விடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் கடந்த 27ஆம் திகதி அவர்கள் இருவரையும் பொலிஸார் கைதுசெய்தனர்.
அத்துடன், இளைஞனின் தாய் மற்றும் சகோதரி ஆகியோரையும் பொலிஸார் கைதுசெய்தனர். கடத்தலுக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் கடத்தல் சம்பவத்துக்கு உதவியவர்கள் என மொத்தமாக 06 பேர் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இவர்களை நாளை (01) வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளதுடன், யுவதி வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 hours ago
9 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago
15 Dec 2025