2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ரெஜினோல்ட் குரே - இராஜாங்க செயலாளர் சந்தித்து பேச்சு

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரொமேஸ் மதுசங்க

நோர்வே இராஜாங்க செயலாளர் டொரே ஹெட்ரம், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, வட மாகாணசபை ஆளுநர் அலுவலகத்தின் இன்று புதன்கிழமை(01) சந்தித்தார்.

நோர்வே இராஜாங்க செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தனை நேற்று சந்தித்ததையடுத்து, யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், வடக்கில் மீள்குடியேற்றம் மற்றும் யாழ். மாவட்ட மக்களின் ஜீவனோபாயத்தை மேம்படுத்தல், மீன்பிடி துறையின் முன்னேற்றம், விவசாய நலன்களை முன்னேற்றல் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கையில் உள்ள களப்புகளில் அதிகளவான களப்புகள், வடமாகாணத்தில் அதுவும் யாழ் மாவட்டத்தில் உள்ளதால் அவற்றை பயன்படுத்தில் மீன்பிடி கைத்தொழிலைக் கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X