Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 டிசெம்பர் 12 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.றொசாந்த், எஸ்.என்.நிபோஜன், டி.விஜிதா
யாழ்ப்பாணம், சாவகச்சேரி நகரசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணத்தை, ஐக்கிய தேசிய கட்சி இன்று(12) செலுத்தியுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர்கள் உறுப்பினர்கள் இணைந்து, கட்டுப்பணத்தைச் செலுத்தினர்.
இதற்கமைய, யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலனிடம், தமது கட்சி சார்பில் கட்டுப்பணத்தைச் செலுத்தி, வேட்பாளர் விண்ணப்ப படிவத்தைப் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை, கிளிநொச்சி மாவட்ட தேர்தல் செயலகத்தில் இன்று (12) கட்டுப்பணத்தைச் செலுத்தியது.
இதற்கமைய, வடமேல் மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ் எம் ரஞ்சித் சமரகோன் தலைமையில் கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளைய தினம் (செவ்வாய்க்கிழமை) கரைச்சி பிரதேச சபைக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய இரண்டு பிரதேச சபைகளுக்கும் விரைவில் செலுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
5 hours ago