2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

ரயில் மோதி காயமடைந்தவர் 20 நாட்களின் பின் உயிரிழப்பு

Menaka Mookandi   / 2015 டிசெம்பர் 24 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ்ப்பாணம், மீசாலை பகுதியில் கடந்த 13ஆம் திகதி பாதுகாப்பற்ற ரயில் கடவையில் முச்சக்கரவண்டியுடன் கடக்க முற்பட்டு ரயிலுடன் மோதி படுகாயமடைந்த நபர், சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை (23) உயிரிழந்தார்.  

அதேயிடத்தைச் சேர்ந்த சின்னத்துரை பிரசன்னா (வயது 22) என்பவரே உயிரிழந்தார்.

ரயில் மோதியதில் இவரது முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்ததுடன், அதில் பயணித்த இருவர்  படுகாயமடைந்த நிலையில் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X