2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

ரயிலில் மோதி இராணுவ வீரர் உயிரிழப்பு

George   / 2017 பெப்ரவரி 09 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம், அரியாலை, நெடுங்குளம் பகுதியில், யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ் தேவி ரயிலில் மோதி, இராணுவ வீரரொருவர், இன்று பலியானதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

ரயில் கடவையில் கடக்க முற்பட்ட போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன்,  படுகாயமடைந்த வீரர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை யாழ். பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X