2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

ரயில் விபத்தில் இராணுவ வீரர் இருவர் பலி

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 10 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன்,

யாழ்ப்பாணம்  அரியாலைநெலுக்குளம் பகுதியில்  ரயிலுடன் இராணுவத்தினர் பயணித்த வாகனம்  மோதுண்டதில், இராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளடன் மற்றையவர் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை (9) முற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் கொலம்பாவ குருநாகல் பகுதியினை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஆர்.டி.எம்.புஸ்பகுமார மற்றும் அநுராதபுரம் பகுதியினை சேர்ந்த ஈ.எம்.ஏ.எச்.எக்கநாயக்க ஆகியோரே உயிரிழந்தவராவார்கள்.

குறித்த இருவரும் நாவற்குழி பகுதியில் உள்ள 15ஆவது விஜயபாகு றெஜிமென்ட் படைப்பரிவில் கடமையாற்றியதாகவும், வாகனத்தினை பழுதுபார்க்கும் நிலையத்திற்கு எடுத்து சென்ற போது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புநோக்கி பயணித்த ரயிலுடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X