2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதி இளைஞன் பலி

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள ரயில் கடவையில் வைத்து, நேற்று பிற்பகல் 3 மணியளவில், ரயிலுடன் மோதுண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நுணாவில் மேற்கைச் சேர்ந்த 24 வயதுடைய விக்னா என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக, சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள மோட்டார் சைக்கிள் திருத்தும் கடையில் தனது மோட்டார் சைக்கிளை திருத்துவதற்காக கொடுத்திருந்த நிலையில், அதனைப் பார்வையிட நண்பர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் கடவையைக் கடக்க முற்பட்டபோதே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X