2025 ஜூலை 23, புதன்கிழமை

ரயிலுடன் மோதி கார் விபத்து

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 04 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் கந்தர்மடம் ரயில் கடவையில், இன்று மதியம் ரயிலுடன் மோதி காரொன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் எவருக்கும் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவித்த பொலிஸார் கார் பலத்த சேதமடைந்துள்ளதாக கூறினர்.

பெண் வைத்தியர் ஒருவர் குறித்த ரயில் கடவையை கடக்க முற்பட்டபோது, இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. புகையிரதம் வருவதை அவதானித்த வைத்தியர் காரிலிருந்து இறங்கியுள்ளார்.

இதனால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .