2025 மே 03, சனிக்கிழமை

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி

Freelancer   / 2023 ஜூலை 22 , பி.ப. 02:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது.

மீசாலை புகையிரத நிலையத்துக்கு அருகில் இன்று காலை 11.30 மணியளவில் புகையிரத கடவையை அண்டியே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் புகையிரதக் கடவையை கடக்க முற்பட்டபோதே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் மீசாலை கிழக்கைச் சேர்ந்த 68 வயதுடைய செல்லையா பரமசாமி என்பவரே உயிரிழந்துள்ளார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X