2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

‘ரயில் கடவை விபத்துகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Editorial   / 2017 ஓகஸ்ட் 21 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“வடக்கிலுள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுப்பதற்கு, வட மாகாண சபை உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்து, வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சி. தவராசா, மாகாண சபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளார்.  

அப்பிரேரணையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

“பாதுகாப்பற்ற கடவைகள் இருக்கின்ற உள்ளூராட்சி சபைகள், தற்காலிக பாதுகாப்புத் தடைகளை ஏற்படுத்தி அவற்றைச் செயற்படுத்துவதற்கு ஒருவரைப் பிரதேச சபை செலவிலே நிரந்தரமாக நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படுபவர் அண்மித்த ரயில் நிலையங்களுடன் நேரடித் தொடர்புகளை மேற்கொள்வதன் மூலம், ரயில் வருகின்ற நேரத்தில் கடவைகளை மூடுவதற்கு ஏதுவாக ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்டோருக்கு பணிப்புரை வழங்குவதோடு, இலங்கை ரயில் சேவைகள் திணைக்களத்துடன் இது தெடார்பாகத் தொடர்பு கொண்டு ஆவன செய்யவேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.   

இவ்வாறு கோரும் பிரேரணையை எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறும் சபை நடவடிக்கையின் போது பிரஸ்தாபிக்கும் வண்ணம் எதிர்க்கட்சித் தலைவரால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X