Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 09 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன், சுப்ரமணியம் பாஸ்கரன்
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (09) அதிகாலை 5.20 மணியளவில், ரயில் மோதியதில், யானை ஒன்று இறந்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த அதிவேக ரயில் மோதியே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் எந்தவிதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.
எனினும், ரயில் மோதியதில் யானை சம்பவ இடத்திலேயே இறந்துள்ளதுடன் யானையின் உடற்பகுதி, ரயில் பெட்டிகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டதால், ரயில் பயணம் பல மணி நேரம் தடைப்பட்டது.
ஏ9 நெடுஞ்சாலையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் காட்டுப் பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றமையால், போலிஸாரும் இராணுவத்தினரும் மக்களது பயண ஒழுங்குகளை சீர் செய்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கனகராயனகுளம் பொலிஸார், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் விபத்து தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
7 hours ago
7 hours ago