2025 மே 02, வெள்ளிக்கிழமை

ரூ.04 இலட்சத்துடன் குடும்பஸ்தர் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 21 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

க.அகரன்

வவுனியாவில் 04 இலட்சம் ரூபாய் பணத்துடன் குடும்பஸ்தர் ஒருவர், இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார் என சிதம்பரபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா, சிதம்பரம் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு, அங்கிருந்த 04 இலட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகரால், சிதம்பரபுரம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

முறைப்பாடு தொடர்பில் சிதம்பரபுரம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிரோசன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் துரித நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சிதம்பரபுரம் பகுதியில் வீதிப் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட 04 இலட்சம் ரூபாய் பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டது.

மேலதிக விசாரணையின் பின் குறித்த நபரை, நீதிமன்றிலை முற்படுத்த சிதம்பரபுரம் பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .