2025 மே 02, வெள்ளிக்கிழமை

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடி தண்டனை

Freelancer   / 2022 மே 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

பத்தாயிரம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஊர்காவற்துறை நெடுந்தீவு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு உடனடி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

நேற்று முன்தினம் கல்வியங்காடு பகுதியில் டிப்பர் ஒன்றினை மறித்த பொலிஸார் 10,000 ரூபா பணம் பெற்றமை தொடர்பில் பாதிக்கப்பட்ட நபர் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகே அவர்களிடம் நேரடியாக சென்று முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, குறித்த நபரிடம் இருந்து பெற்றுக்கொண்ட பத்தாயிரம் ரூபா பணத்தை திரும்பி வழங்குமாறு உத்தரவிட்டதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கியுள்ளார்.  (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .