Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
க. அகரன் / 2018 ஜூலை 16 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வட மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதனுக்கு எதிராக, வவுனியா வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களால், வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று (16) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில், கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின்போது, பிரதேச செயலாளருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து, வட மாகாணசபை உறுப்பினர் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தார்.
இதன்போது, பிரதேசச் செயலாளரை அச்சுறுத்தும் விதமாக, குறித்த மாகாணசபை உறுப்பினர் செயற்பட்டார்.
இதையடுத்து, வீடமைப்பு திட்டமொன்றுக்கான அடிக்கல் நாட்டும் விழாவை, தேசிய வீடமைப்பு அதிகாரசபை ஏற்பாடு செய்திருந்தது.
அந்நிகழ்வில், பிரதேசச் செயலாளரும் கலந்துகொண்டிருந்த நிலையில், அந்நிகழ்வுக்குத் தன்னை அழைக்கவில்லை எனத் தெரிவித்த குறித்த மாகாணசபை உறுப்பினர், பிரதேசச் செயலாளருடன் முரண்பட்டார்.
இந்நிலையில், மேற்படி சம்பவங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, பிரதேசச் செயலக உத்தியோகத்தர்களால், ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
3 minute ago
34 minute ago
55 minute ago
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
34 minute ago
55 minute ago
25 Sep 2025